ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை நியாயமற்றது! அவர்கள் எங்கள் நட்பு நாடு.. கொந்தளித்த ரஷ்யா
கியூபாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்த்ததற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ரஷ்யா கடுமையாக சாடியுள்ளது.
கியூபாவுக்கு எதிராக
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் அதிரடியான முடிவுகளை அறிவித்து வருகிறார்.
அதில் ஒன்றாக கியூபா நாட்டை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் ட்ரம்ப் சேர்த்துள்ளார்.
இந்த நிலையில், ட்ரம்பின் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக சாடியுள்ளது.
மரியா ஜகரோவா
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா வெளியிட்ட அறிக்கையில்,
"புதிதாக பதவியேற்ற ட்ரம்பின் உத்தரவு சந்தேகத்திற்கு இடமின்றி நிலைமையை சீர்குலைத்து கியூபாவில் அதிகாரத்தை மாற்றும் நம்பிக்கையில் நிதி மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த நடவடிக்கை நியாயமற்றது. ஏனெனில் கியூபா பயங்கரவாத எதிர்ப்பு மீதான சர்வதேச ஒத்துழைப்பில் தீவிரமாக பங்கேற்கிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |