ஆங்கிலக்கால்வாயில் ரஷ்ய நீர்மூழ்கி: நேட்டோ வெளியிட்டுள்ள செய்தி
எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம் என கருதப்பட்ட ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று ஆங்கிலக்கால்வாயில் பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆங்கிலக்கால்வாயில் ரஷ்ய நீர்மூழ்கி
Novorossiysk என பெயரிடப்பட்டுள்ள, ரஷ்யாவுக்குச் சொந்தமான, அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் படைத்தது என கருதப்படும் நீர்மூழ்கி ஒன்று ஆங்கிலக்கால்வாய் வழியாக ரஷ்யா நோக்கி புறப்பட்டுள்ளது.
அந்தக் கப்பல் பயணிப்பதை நேட்டோ நாடுகளின் போர்க்கப்பல்கள் மாறி மாறி கண்காணித்தவண்ணம் உள்ளன.
மத்தியதரைக்கடலில் பழுதானதால் அதிலிருந்து எரிபொருள் வெளியேறி, அது எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம் என்னும் ஒரு அபாய நிலை காணப்பட்ட நிலையில், தற்போது அந்த நீர்மூழ்கி ரஷ்யா நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
நேட்டோ வெளியிட்டுள்ள செய்தி
Novorossiysk நீர்மூழ்கிக்கப்பல் ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கும் காட்சியை சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள நேட்டோ அமைப்பு, அந்த செய்திக்கு, ‘நாங்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறோம்’ என்று தலைப்புக் கொடுத்துள்ளது.
We. Are. Watching. 👀
— NATO Maritime Command (@NATO_MARCOM) October 9, 2025
📍 Atlantic Ocean
⚓ A French Navy frigate 🇫🇷 conducts surveillance of the Alliance’s maritime approaches, marking the presence of a Russian submarine 🇷🇺 operating on the surface off the coast of Brittany. NATO stands ready to defend our Alliance with… pic.twitter.com/SeTh3Ij7NN
ரஷ்யாவை எச்சரிக்கும் வகையில் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |