ரஷ்யாவால் மிகக் குறுகிய அறிவிப்பில் இந்த ஐரோப்பிய நாட்டை தாக்க முடியும்! அமெரிக்க எச்சரிக்கை
ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிகக் குறுகிய அறிவிப்பில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், தலைநக,ர் Kyiv-வில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு தூதரக அதிகாரிகளிடம் ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது, உக்ரைன் எல்லைகளுக்கு அருகே ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிகக் குறுகிய அறிவிப்பில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட முடியும்.
எனினும், இந்த வாரம் உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஜெனீவாவில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov-வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன்.
பேச்சுவார்த்தையின் விளைவாக ரஷ்யா ஒரு தூதரக மற்றும் அமைதியான பாதைக்கு திரும்பும் என்று தான் உறுதியாக நம்புவதாக பிளின்கன் கூறினார்.
அதேசமயம், மிகக் குறுகிய அறிவிப்பில் ரஷ்ய அதன் படைகளின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது குறித்து எங்களுக்கு தெரியும், இதன் மூலம் மிகக் குறுகிய அறிவிப்பில் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.