மூன்றே நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவோம்: ரஷ்ய பிரபலம் மிரட்டல்
அணு ஆயுதங்களால் மூன்றே நாளில் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியும் என ரஷ்ய பிரபலம் விளாடிமிர் சோலோவியோவ் மிரட்டல் விடுத்துள்ளார்.
அலறத் தொடங்கும்
உக்ரைன் தலைநகரை வரைபடத்தில் இருந்தே அப்புறப்படுத்த தங்களால் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோலோவியோவ்,
அணு ஆயுதங்களால் மட்டுமே இனி வெற்றி என குறிப்பிட்ட அவர், இதன் பின்னர் மேற்கத்திய நாடுகள் அலறத் தொடங்கும் என்றார். பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவால் தடைவிதிக்கப்பட்டுள்ள சோலோவியோவ்,
போர்க் கலை என்பது பொதுமக்களைக் காப்பாற்றுவது பற்றியது அல்ல, மாறாக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவது பற்றியது என்றார். உக்ரைனால் நெருங்கவே முடியாத பல வகை ஆபத்தான ஆயுதங்களை நாம் பயன்படுத்தி, நமது தரைப்படைகள் முன்னேற பாதை வகுக்க வேண்டும் என்றார்.
மொத்தமாக அழிக்கப்படும்
அப்படியனால், நமது இழப்புகளும் குறைவாக இருக்கும் என்றார். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட நிலம் எதிர்காலத்தில் வசிப்பதற்கு ஏற்றதாக இருக்காது, ஆனால் நாம் மிக விரைவாக முன்னேற முடியும்.
மூன்றே நாட்களில் நம்மால் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியும். அதன் பிறகு உக்ரைன் தலைநகர் மொத்தமாக அழிக்கப்படும், ரஷ்ய கொடி அங்கே பறக்கும் என்றார்.
மேலும் ரஷ்யாவை அணு ஆயுதங்களால் தாக்குவதன் மூலம் மேற்கு நாடுகள் பதிலளிக்காது. அது சாத்தியமற்றது என்பதை மேற்கு நாடுகள் நன்கு அறிந்திருக்கின்றன என்றும் சோலோவியோவ் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |