ரஷ்யா வசமானது உக்ரைனின் அவிடியிவ் நகரம்: உக்ரைன் போரில் முக்கிய திருப்புமுனை!
உக்ரைனிய படைகள் வெளியேறியதை தொடர்ந்து, முக்கிய மூலோபாய நகரான ஆவிடியிவ்-ஐ கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா கட்டுப்பாட்டில் Avdiivka நகரம்
உக்ரைன் படைகள் முக்கிய மூலோபாய நகரத்திலிருந்து தந்திரோபாய ரீதியான பின்வாங்கலைத் தொடர்ந்து, ரஷ்யா கிழக்கு உக்ரைன் நகரமான ஆவிடியிவ்(Avdiivka) கைப்பற்றியதாகக் கூறியுள்ளது.
போரின் தொடக்கத்திலிருந்து ஆவிடியிவ் (டோனெட்ஸ்க்-Donetsk பகுதியில் அமைந்துள்ளது) உக்ரைனின் முக்கிய கோட்டையாக இருந்து வருகிறது. அதன் கைப்பற்றல் ஸ்லோவியான்ஸ்க்(Sloviansk) மற்றும் க்ராமடோர்ஸ்க்(Kramatorsk) ஆகிய முக்கிய நகரங்களுக்கு முன்னேற ரஷ்யாவிற்கு வழிவகுக்கிறது.
Reuters
கடந்த மே மாதம் பக்முட் கைப்பற்றியதற்குப் பிறகு, ரஷ்யாவிற்கு இது குறிப்பிடத்தக்க பிரதேச ஆதாயமாகும்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Russian President Vladimir Putin) இதனை "முக்கிய வெற்றி" என்று பாராட்டியுள்ளார்.
இருப்பினும், உக்ரைன் இராணுவம் தங்கள் வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றவே பின்வாங்கியதாகவும், போராட்டம் தொடர்வதாகவும் உறுதிபடுத்தியுள்ளது.
மாறுபட்ட கருத்துகள்
ரஷ்யா: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பிப்ரவரி 17 ஆம் திகதி கைப்பற்றலை அறிவித்தது, நகரத்தின் மூலோபாய கொக்(coke) மற்றும் வேதியியல் ஆலையில்(chemical plant) “இறுதி “எதிர்ப்பு குழுவையும் அழித்ததாக கூறியுள்ளது.
Reuters
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதை "போரில் திருப்புமுனை" என்று அழைத்தார். ஆன்லைனில் வலம் வரும் சில வீடியோக்களில் ரஷ்ய வீரர்கள் ஆலையில் தங்கள் கொடியை உயர்த்துவதை பார்க்க முடிகிறது.
உக்ரைன்: உக்ரைன் இராணுவத் தலைவர் ஓலெக்சாண்டர் சிர்கி(Oleksandr Syrskyi), பின்வாங்கலை ஒப்புக்கொண்டார், ஆனால் ரஷ்யாவின் தாக்குதல் திறன் மற்றும் வெடிமருந்து தட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்கொள்ளும்போது தங்கள் வீரர்களின் உயிர்களைக் காப்பாற்ற இது ஒரு தந்திரோபாய முடிவு என்று வலியுறுத்தினார்.
Reuters
மேலும் ”நாங்கள் எங்கள் பிரதேசத்தை விட்டுக்கொடுக்கவில்லை, எங்கள் மக்களை காப்பாற்றுகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மேற்கு நேட்டோக்களிடமிருந்து கூடுதல் இராணுவ உதவி தேவை என்று உக்ரைன் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |