உக்ரைனில் முக்கிய நகரை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்! வெற்றிகரமான நடவடிக்கை என அறிவிப்பு
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கிழக்கு உக்ரேனிய நகரமான Selydove கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.
வான்வழி தாக்குதல்
உக்ரைனின் கிழக்கு பகுதியில் கடந்த சில வாரங்களாக ராணுவ முற்றுகையை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நேற்றிரவு உக்ரைனின் பல்வேறு நகரங்களின் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்களில் 9 பேர் பலியாகினர்.
போர்க்கள ஆதாயம்
இந்நிலையில், Pokrovskவிற்கு தென்கிழக்கே 18 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள முன்னணி நகரமான Selydoveவை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
இது ரஷ்யாவிற்கு சமீபத்திய போர்க்கள ஆதாயமாகும். இதன்மூலம் Donetsk பிராந்தியத்தில் படிப்படியாக உக்ரேனிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
Selydove நகரைக் கைப்பற்றியதன் மூலம், அதன் அருகிலுள்ள தளவாட மையமான Pokrovskயை கைப்பற்றுவதற்கான பரந்த உந்துதலின் ஒரு பகுதியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |