உக்ரைனின் கார்கிவ் நகரை சூழ்ந்த ரஷ்ய வீரர்கள்: முக்கிய கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா
உக்ரைனில் உள்ள முக்கிய கிராமப்புற பகுதி ஒன்றை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
உக்ரைனிய கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா
உக்ரைனின் வடகிழக்கு பகுதியான கார்கிவ்(Kharkiv) பிராந்தியத்தின் முக்கியமான குடியிருப்பு கிராமமான பொடோலி(Podoli) பகுதியை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், உக்ரைனின் பொடோலி நகர குடியிருப்பு பகுதியை ரஷ்ய இராணுவ பிரிவினர் வெற்றிகரமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
☝🏻‼️🇷🇺 The Russian Army has liberated Podoly in the Kharkov region, the Ministry of Defense reports.
— MD (@distant_earth83) January 4, 2026
▪️ Units of the “West” grouping, as a result of active operations, took control of the settlement of Podoly in the Kharkov region, the statement says. pic.twitter.com/ukgni292T7
இந்த பிராந்திய வெற்றியானது ரஷ்யாவின் ஜாபாட்(Zapad - மேற்கு) படைப் பிரிவின் துணிச்சலான தாக்குதல் நடவடிக்கையின் மூலம் கிடைத்துள்ளது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், சமீபத்திய மாதங்களில் போர் முன்கள வரிசையில் அமைந்துள்ள கார்கிவ் போன்ற பிராந்தியங்களில் தீவிரமான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த மோதலில் தற்போது ரஷ்யாவுக்கு சாதகமாக பொடோலி நகரத்தை கைப்பற்றியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |