உக்ரைனில் அடுத்த தாக்குதல் இதுவாக இருக்கலாம்! ரஷ்யாவின் தந்திரம் குறித்து எச்சரிக்கும் அமெரிக்கா
ரஷ்யா உக்ரைனில் இரசாயன தாக்குதல் நடத்தலாம் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
உக்ரைனில் இரசாயன (Chemical) அல்லது உயிரியல் (Biological) ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டிருக்கலாம் என்றும் "நாம் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும்" என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா எல்லைக்கு அருகில் உயிரியல் ஆயுதங்களின் கூறுகளை அமெரிக்கர்கள் மறைத்து வைத்திருப்பதாக நேற்று ரஷ்யா பகிரங்கமாக குற்றம் சாட்டியது. உக்ரைனில் அமெரிக்கா உயிரியல் போர் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Maria Zakhorava கூறினார். மேலும் உக்ரைனில் அமெரிக்கா என்ன செய்து வருகிறது என்பது பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜென் சாகி, ரஷ்யாவின் கூற்றுக்கள் அபத்தமானது என்று கூறியுள்ளார். இது திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்த முயற்சிக்கும் ரஷ்யாவின் "வெளிப்படையான தந்திரம்" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, மேற்கத்திய அதிகாரிகள் புதிய தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். போர் தீவிரமடையக்கூடிய அபாயம் குறித்தும், குறிப்பாக ரஷ்யா மரபு சாரா ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் "மிகக் கவலைப்படுவதாக" அவர்கள் கூறினர்
. சிறிய அளவிலான அணு ஆயுதங்கள் (Tactical nuclear weapons), உயிரியல் ஆயுதங்கள் (biological weapons) மற்றும் Dirty Bombs போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என கூறியுள்ளனர்.
PictureCredit:Patrick Semansky/APWe took note of Russia’s false claims about alleged U.S. biological weapons labs and chemical weapons development in Ukraine. We’ve also seen Chinese officials echo these conspiracy theories.
— Jen Psaki (@PressSec) March 9, 2022