பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி
பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறைவைத்துள்ள ரஷ்யா, நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் என விளாடிமிர் புடினின் மிக நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மோசமான நிலை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இலக்கு வைத்துள்ள இடங்களை எடுத்துக்காட்டும் வரைபடத்தை செனட்டர் டிமித்ரி ரோகோசின் வெளியிட்டார். முன்னாள் துணைப் பிரதமரும் விண்வெளி நிறுவனத் தலைவருமான ரோகோசின்,
பிரித்தானியா மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார். அத்துடன் பிரித்தானியாவின் இராணுவ தளங்களான பாரோ, பிளைமவுத் மற்றும் கிளாஸ்கோ தொடர்பிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் இலக்குகள் என குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள வரைபடம் ஒன்றை குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ள ரோகோசின், ரஷ்ய பெரும் வணிகர்கள் தங்கள் பிள்ளைகளை பிரித்தானியாவில் கல்விக்காக அனுப்ப வேண்டாம் என்றும், அது மிக மிக ஆபத்தில் முடியும் என எச்சரித்துள்ளார்.
ஆனால், முன்னாள் பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் அளித்த நேர்காணல் ஒன்றில், ரஷ்யா வலுக்கட்டாயமாக உக்ரைனிடம் இருந்து பறித்துள்ள கிரிமியா பகுதியை மொத்தமாக நாசப்படுத்த பிரித்தானியா உக்ரைனுக்கு உதவ வேண்டும் என்றும்,
நான்கு தேசங்களிலும்
ரஷ்யா எந்த காலத்திலும் அப்பகுதியை உக்ரைனிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ரோகோசின் பிரித்தானியாவிற்கு எதிராக கொந்தளித்துள்ளார்.
உண்மையில் பிரித்தானியா மற்றும் உக்ரைன் நட்பு நாடுகளின் பொய் முகங்கள் அம்பலமாகியுள்ளது என்றும் ரோகோசின் தெரிவித்துள்ளார். ரோகோசின் குறிப்பிட்டுள்ள அந்த 23 பகுதிகளில் இராணுவ, தொழிற்பேட்டைகள் பல அமைந்துள்ளதுடன், இங்கிலாந்தின் நான்கு தேசங்களிலும் குறிவைக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இரண்டாம் உலகப் போரின் போது தேம்ஸ் நதிக்கரையில் 1,400 டன் வெடிபொருட்களுடன் விபத்துக்குள்ளான கப்பலை தற்போது வெடிக்கச் செய்வதற்கான பயங்கரவாத நடவடிக்கை குறித்து ரஷ்ய அரசு தொலைக்காட்சி ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |