தென்கொரியாவை நோக்கி வந்த பத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்களால் பரபரப்பு
தென்கொரியா, தங்கள் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்துக்குள், பத்துக்கும் மேற்பட்ட சீன மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்ததாக தெரிவித்துள்ளது.
தென்கொரியாவை நோக்கி வந்த போர் விமானங்கள்
இன்று, பத்துக்கும் மேற்பட்ட சீன மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்துக்குள் நுழைந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் போர் விமானங்களை தயாராக நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
விடயம் என்னவென்றால், இந்த வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் என்பது, ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட வான்வெளி அல்ல.

ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட வான்வெளிக்கு, வெளியே அமைந்துள்ள வான்வெளிதான் அது.
அதாவது, அந்தப் பகுதிக்குள் ஏதேனும் போர் விமானங்கள் நுழையும் பட்சத்தில், பாதுகாப்பு கருதி அந்த நாடு தன் போர் விமானங்களை தயாராக நிலை நிறுத்தும்.
ஆக, சீன மற்றும் ரஷ்ய போர் விமானங்கள், கிழக்குக் கடல் மற்றும் தென் கடலுக்கு மேல் உள்ள தங்கள் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்துக்குள் நுழைந்ததை தங்கள் நாட்டு ராணுவம் கண்டறிந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் போர் விமானங்களை தயாராக நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
என்றாலும், அந்த விமானங்கள் தங்கள் இறையாண்மைக்கு உட்பட்ட வான்வெளிக்குள் நுழையவில்லை என்றும், அவை திரும்பிச் சென்றுவிட்டதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த விடயம் தொடர்பில் ரஷ்யாவோ, சீனாவோ உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |