எல்லைகளை மூடிய ரஷ்யா... பீதியில் மக்கள்: பின்னணி
ரஷ்யாவில் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான ரஷ்யர்களுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீதியில் மக்கள்
ரஷ்யா முழுவதும், electronic military draft notices என்னும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த electronic military draft notices என்பது, மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் முதலான அடையாளங்களை சரிபார்ப்பதற்காக அரசு பொதுமக்களுக்கு விடுக்கும் ஒரு அழைப்பு ஆகும்.
ஆனால், உண்மையில் அது ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கான ஒரு மறைமுகத் திட்டம் என்கிறார் சட்டத்தரணியான Timofey Vaskin என்பவர். இது ரஷ்யாவில் சகஜம்தான் என்றும் அவர் கூறுகிறார்.
அதாவது, அடையாளங்களை சரிபார்ப்பதுபோல் அழைக்கப்பட்டு, மக்களை ராணுவத்தில் சேர்க்கும் ஒரு திட்டம் இது எனலாம்.
2022ஆம் ஆண்டு ராணுவத்துக்கு ஆள் சேர்க்க புடின் முற்பட்டபோது, அது தெரிந்ததும் லட்சக்கணக்கான மக்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதற்காக எல்லை நோக்கி புறப்பட்டார்கள்.
ஆகவே, இம்முறை வெளிப்படையாக ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கான நடவடிக்கையாக இல்லாமல், அடையாளங்களை சரிபார்ப்பதுபோல் மக்களுக்கு electronic military draft notice அனுப்பப்படுகிறது.
அந்த டிஜிட்டல் பதிவேட்டில் ஒருவருடைய பெயர் பதிவானதும், அவர் ரஷ்யாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்படும். ஆக, பொதுமக்களுக்கு ரஷ்ய எல்லைகள் மூடப்பட்டுள்ளன எனலாம்.
இதற்கிடையில், 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகத்து வரையிலான காலகட்டத்தில் மட்டும் ரஷ்யா 281,550 போர் வீரர்களை இழந்துள்ளதாக ரகசிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதை ஈடு செய்யத்தான், இப்படி மக்களுடைய அடையாளங்களை சரிபார்ப்பதுபோல் அழைத்து, அவர்களை ராணுவத்தில் சேர்க்க ரஷ்யா இப்படி ஒரு நடவடிக்கையைத் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |