அண்டை நாடுகளுடனான ரயில்வே எல்லை கடப்புகளை மூடிய ரஷ்யா
பின்லாந்து, லாட்வியா உள்ளிட்ட 7 ரயில்வே எல்லை சோதனை சாவடிகளை ரஷ்யா மூடியுள்ளது.
ரயில்வே எல்லை சோதனை
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் ரஷ்யாவுடனான தனது கிழக்கு வாகன மற்றும் பாதசாரிகள் எல்லைக் கடவுகளை பின்லாந்து காலவரையின்றி மூடியது.
இந்த நிலையில், பின்லாந்து, எஸ்தோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகளுடனான ஏழு ரயில்வே எல்லை சோதனை சாவடிகளை ரஷ்யா மூடியுள்ளது.
இவற்றில் 5 சோதனை சாவடிகள் பின்லாந்து எல்லையிலும், எஸ்தோனியா மற்றும் லாட்வியாவில் தலா ஒன்றும் அமைந்துள்ளன.
சரக்குகள் செல்வது நிறுத்தப்படுகிறது
ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும் இந்த நடவடிக்கையின் மூலம், குறிப்பிட்ட ரயில்வே எல்லைக் கடப்புகள் வழியாக மக்கள், வாகனங்கள் மற்றும் சரக்குகள் செல்வது நிறுத்தப்படுகிறது.
இந்த மூடல் நடவடிக்கைகளுக்கான காரணங்களையோ அல்லது சோதனைச் சாவடிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதையோ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |