இந்த குற்றங்களுக்காக ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்... பட்டியலிட்ட ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
ரஷ்யாவின் 2022 படையெடுப்பிலிருந்து உக்ரைனால் ஆவணப்படுத்தப்பட்ட 183,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
அட்டூழியங்களுக்கு
தீமை பெருகுவதைத் தடுக்க நீதி தேவைப்படுவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவின் வடமேற்கில் உள்ள புச்சாவில் நடந்த ஐரோப்பிய அதிகாரிகளின் உச்சி மாநாட்டிலேயே ஜெலென்ஸ்கி தனது கருத்துக்களை தெரிவித்தார்.
ரஷ்ய துருப்புக்கள் புச்சாவை ஆக்கிரமித்தபோது மரணதண்டனை, கற்பழிப்பு மற்றும் சித்திரவதை உள்ளிட்ட அட்டூழியங்களுக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், உக்ரைன் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகளை ஏற்கனவே ரஷ்யா மறுத்துள்ளது.
மட்டுமின்றி, மேற்கு நாடுகள் உக்ரைனின் இந்த குற்றச்சாட்டுகளை புறக்கணித்துள்ளதாகவும் ரஷ்யா கூறியது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புடன் தொடர்புடைய 183,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் உத்தியோகப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மட்டுமின்றி, ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிலிருந்து உக்ரைனால் ஆவணப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில், ரஷ்யா தற்போது ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பிரதேசத்தின் பெரும்பகுதி சேர்க்கப்படவில்லை என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து நமது மக்களையும் அனைத்து ஐரோப்பிய சமூகத்தையும் பாதுகாக்க உறுதியளிக்கும் பயனுள்ள சர்வதேச சட்டம் நமக்குத் தேவை எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.
178 பேர் மீது வழக்குப் பதிவு
தீமை பெருகுவதைத் தடுக்க நீதி நிலைநாட்டப்பட வேண்டும். போரும் துஷ்பிரயோகமும் மேலும் விரிவடையாமல் இருப்பதை உறுதி செய்ய ரஷ்யா மீது அழுத்தம் மற்றும் அதற்கு எதிரான தடைகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான பெரும்பாலான போர்க்குற்ற வழக்குகள் உக்ரைனால் விசாரிக்கப்பட்டு உள்ளூரில் முடிவெடுக்கப்பட்டன. இந்த ஆண்டு உக்ரைன் உத்தியோகப்பூர்வமாக இணைந்த ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், ரஷ்ய போர்குற்றம் தொடர்பில் முதன்மையான வழக்குகள் குறித்தும் விசாரணைகளை நடத்தியது.
உக்ரைனின் பொறுப்பு சட்டத்தரணி ஜெனரலின் கூற்றுப்படி, புச்சாவைச் சுற்றியுள்ள பகுதியில் ரஷ்யப் படைகள் 9,000க்கும் மேற்பட்ட குற்றங்களைச் செய்துள்ளன, அவற்றில் 1,800 கொலைகளும் அடங்கும்.
மேலும், உக்ரைன் அதிகாரிகள் இதுவரை 178 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அதில் 21 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |