புதிய அணுசக்தி ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா: புடின் விடுத்த உத்தரவு
ரஷ்யா அணுசக்தி மூலம் இயங்கும் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ஏவுகணை சோதனை
ரஷ்யா அணுசக்தி மூலம் இயங்கும் புரெவெஸ்ட்னிக்(Burvestnik) என்ற கப்பல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மூத்த இராணுவ தளபதிக்கு இடையிலான உயர்மட்ட சந்திப்புக்கு பிறகு இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சோதனையின் போது ஏவுகணை சுமார் 15 மணி நேரம் பறந்ததுடன் சுமார் 14,000 கிலோமீட்டர் தூரத்தை கடந்ததாக ரஷ்ய ஆயுதப் படை தளபதி ஜெனரல் வலெரி ஜெரசிமோவ் ஜனாதிபதி புடினிடம் தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை அணுசக்தி மூலம் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ராணுவ உடையில் தோன்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 9M730 புரெவெஸ்ட்னிக் ஏவுகணையின் சோதனை வெற்றிக்கு பிறகு அதன் இறுதி கட்டப் பணிகளை விரைவாக முடிக்கவும் ஜெனரல் ஜெரசிமோவிடம் உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |