புடினின் ஆதரவு தலைவர் ஐரோப்பிய நாட்டில் அதிரடி கைது: அடக்குமுறை நடவடிக்கை என ரஷ்யா கண்டனம்
மால்டோவாவின் ககாவுஸ் பிராந்திய தலைவர் கைது செய்யப்பட்டதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
72 மணிநேர காவல்
ஐரோப்பிய குடியரசின் மால்டோவாவில், Chisinau சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ககாவுஸ் (Gagauz) தலைவர் Evghenia Gutul கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் 72 மணிநேர காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது தடைசெய்யப்பட்டுள்ள ரஷ்ய சார்பு Shor கட்சிக்கு ரஷ்ய நிதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆதரவைப் பெற ரஷ்யா சென்ற Gutulவை, மால்டோவாவின் அதிகாரிகள் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சித்தனர்.
ரஷ்யா கண்டனம்
இந்த நிலையில் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "தற்போதைய மால்டோவன் அதிகாரிகள், ஜனாதிபதி Maia Sanduவுக்கு போட்டியாக இருக்கக்கூடிய, பிரபலமான மற்றும் சுறுசுறுப்பான அரசியல்வாதிகள் மீது அப்பட்டமான அழுத்தத்தை சந்தேகத்திற்கு இடமின்றி செலுத்துகிறார்கள்.
இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். மேலும், Chisinau இந்த முறைகளைக் கைவிட்டு, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |