அமெரிக்க கடற்பகுதியை வரைபடத்திலிருந்தே... ரஷ்யா உருவாக்கியதிலேயே பயங்கரமான ஆயுதம்
அமெரிக்காவின் கடற்கரைப்பகுதியை வரைபடத்திலிருந்தே துடைத்தெறியக்கூடிய ஒரு பயங்கரமான புதிய ஆயுதம் குறித்த தகவலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார்.
மிகவும் பயங்கரமான
ரஷ்யாவால் Poseidon என குறிப்பிடப்படும் அந்த ஆயுதமானது அணு ஆயுதம் தாங்கிய, நீர்மூழ்கி அல்லது கப்பலில் இருந்து ஏவப்படும் புதியவகை ஏவுகணையாகும்.

ரஷ்யா இதுவரை உருவாக்கிய மிகவும் பயங்கரமான ஆயுதம் இதுவென்றும் குறிப்பிடுகின்றனர். இராணுவ நிபுணர்கள் கூறுகையில், எந்த நாடும் கண்டறியப்படாமல் இலக்கை எட்டுவதற்கு ஆயிரக்கணக்கான மைல்கள் கடல்களில் பயணிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
எதிரி நாடுகளின் கடலோரப்பகுதிகளை அழிக்கவே ரஷ்யா இப்படியான ஒரு ஆயுதத்தை உருவாக்குகிறது. இதனால் ஏற்படும் கதிரியக்க அலை சுனாமியை உருவாக்குவதுடன், நியூயார்க் அல்லது லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களை நச்சு நீரில் மூழ்கடிக்கக்கூடும்.
Poseidon தொடர்பாக ரஷ்ய ஊடக விவாதம் ஒன்றில், பிரித்தானியாவை மொத்தமாக கடலின் ஆழத்தில் மூழ்கடிக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஆயுதம் இதுவென்றே கொக்கரித்துள்ளனர்.
கடந்த வார தொடக்கத்தில் ரஷ்யா அந்த ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்ததாக விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார். மட்டுமின்றி, முதல் முறையாக அதன் அணு மின் அலகையும் செயல்பாட்டிற்கு கொண்டுவந்ததாக புடின் குறிப்பிட்டிருந்தார்.

100 டன் எடை
இதுபோன்றதொரு ஆயுதம் உலகில் இல்லை என அறிவித்த புடின், எவராலும் இதை எதிர்கொள்ளவும் முடியாது என்றார். Poseidon ஏவுகணையானது 20 மீற்றர் நீளமும், கிட்டத்தட்ட இரண்டு மீற்றர் அகலமும் 100 டன் எடை கொண்டதாக இருக்கும்.
இது மணிக்கு சுமார் 115 மைல் வேகத்தில் நீருக்கடியில் 6,200 மைல்கள் பயணிக்கக் கூடியது. நேட்டோ தரப்பு இந்த ஆயுதத்திற்கு Kanyon என பெயரிட்டுள்ளனர்.

ரஷ்யாவின் மிகப்பெரிய நீர்மூழ்கியான பெல்கோரோட், Poseidon ஏவுகணையில் ஆறு எண்ணிக்கைகளை சுமந்து செல்ல முடியும். தற்போது Poseidon ஏவுகணைப் பயன்பாட்டிற்காகவே, Khabarovsk நீர்மூழ்கியை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |