நாட்டின் கெளரவத்திற்கு விழுந்த அடி! வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாத ரஷ்யா
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யா தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவிடம் 100 மில்லியன் டொலர்களை செலுத்த பணம் உள்ளது மற்றும் அதனை உடனடியாக செலுத்தவும் தயாராக உள்ளது, ஆனால் பொருளாதாரத் தடைகள் காரணமாக சர்வதேச கடனாளிகளுக்கு தொகையைப் பெற முடியாமல் போய்விட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் கெளரவத்திற்கு பெரும் அடியாக இருக்கும் இந்த நிலையைத் தவிர்க்க ரஷ்யா உறுதியாக இருந்தது. கடந்த மே மாதம் 27-ஆம் திகதிக்கும் 100 மில்லியன் டாலர் வட்டி செலுத்த வேண்டியிருந்தது.
பாங்காக் விமான நிலையத்தில் சூட்கேசில் உயிருடன் 109 உயிரினங்கள் கடத்தல்: 2 தமிழ்ப் பெண்கள் கைது
முதலீட்டாளர்களுக்கு பணத்தை விநியோகிக்க, யூரோக்ளியர் என்ற வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டதாக ரஷ்யா கூறியது. ஆனால் ப்ளூம்பெர்க் நியூஸ் படி, அந்த பணம் அங்கேயே சிக்கியுள்ளது, மேலும் கடனாளிகள் அதைப் பெறவில்லை.
நிலுவைத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், அதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை பணம் வரவில்லை, எனவே அது கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என கருதப்படுகிறது.
பணம் செலுத்துவது தடுக்கப்பட்டதா என்று யூரோக்ளியர் கூறாது, ஆனால் அது அனைத்துத் தடைகளையும் கடைப்பிடிப்பதாகக் கூறியது.
பிறந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்து தூக்கிச்சென்று கடித்துக் கொன்ற நாய்கள்..
ரஷ்யா நூறு ஆண்டுகளுக்கு முன் இதே போன்று கடனை திருப்பிக் கொடுக்காமல் இருந்தது. 1918-ல் போல்ஷிவிக் புரட்சியின் போது, புதிய கம்யூனிஸ்ட் தலைவர் விளாடிமிர் லெனின் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் கடன்களை செலுத்த மறுத்தபோது, அதன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முதன்முதலில் பொருளாதாரத் தடைகளை விதித்ததில் இருந்து ரஷ்யா தவிர்க்க முடியாத பாதையில் சென்றுகொண்டு இறுக்கிறது, அதற்கேற்ப பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது.