போலி வீடியோ.. உக்ரைன் மீது படையெடுக்க சதிதிட்டம்! அமெரிக்கா குற்றச்சாட்டை கேட்டு கொந்தளித்த ரஷ்யா
உக்ரைன் மீது படையெடுப்பதற்கான சாக்குப்போக்கை ஜோடிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
ரஷ்யா, உக்ரேனிய எல்லைகளுக்கு அருகில் 1,00,000 படைகளைக் குவித்துள்ளது.
அதேசமயம், உக்ரைன் மீது படையெடுக்க திட்மிடுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றச்சாட்டுவதை ரஷ்யா மறுத்துள்ளது.
உக்ரைன் இராணுவ முகாமில் சேர அனுமதிக்கப்படாது என்பதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் ரஷ்யா உத்தரவாதம் கோரியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்புக்கான சாக்குப்போக்காக, ரஷ்ய மக்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக காட்டும் ஜோடிக்கப்பட்ட போலி வீடியோவைப் பயன்படுத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் நம்புவதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு அபத்தமானது என கூறி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov அதை நிராகரித்துள்ளார்.