ஆயிரக்கணக்கான ட்ரோன்களை ஈரானுக்காக அனுப்பிய ரஷ்யா? புடினின் செய்தித் தொடர்பாளர் கூறிய உண்மை
ஈரானுக்கு தாக்குதல் நடத்த ரஷ்யா ட்ரோன்களை அனுப்பியதாக வெளியான தகவலை டிமிட்ரி பெஸ்கோவ் மறுத்துள்ளார்.
ஆயிரக்கணக்கான ட்ரோன்கள்
அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் விதமாக, ரஷ்யா ஆயிரக்கணக்கான ட்ரோன்களை ஈரானுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது.

ட்ரோன்கள் மட்டுமின்றி உணவு மற்றும் மருந்துகளையும் ஈரானுக்கு அனுப்பும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக, மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஃபைனான்சியல் டைம்ஸ் புதன்கிழமை அன்று செய்தி வெளியிட்டது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரஷ்ய அதிகாரிகளும், ஈரானிய அதிகாரிகளும் இந்த சரக்குகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த சரக்குகள் இந்த மாத இறுதிக்குள் ஈரானை வந்தடையும் என்றும் கூறப்படும் நிலையில், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இவற்றை மறுத்துள்ளார்.
போலித் தகவல்கள்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஊடகங்களால் பல போலித் தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றைப் பொருட்படுத்தாதீர்கள்" என்றார்.

அதே சமயம் ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மனிதாபிமான உதவிகளை அனுப்ப உத்தரவிட்ட பின்னர், ஈரானுக்கு மருந்துகளை அனுப்பியதாக The Emergency Situations அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் மிக நெருங்கிய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும். அமெரிக்க-இஸ்ரேல் போரை "தூண்டப்படாத ஆயுத ஆக்கிரமிப்பு செயல்" என்று ரஷ்யா கண்டித்தது. ஆனால், ஈரானுக்கு இராணுவ உபகரணங்களையும் பொருட்களையும் வழங்கியதை அது மறுக்கிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |