உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல கூலிப்படை! ரஷ்யாவின் திட்டம் அம்பலம்- வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்
உக்ரைன் ஜனாதிபதியையும் அவரது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களையும் கொல்வதற்காக, ஆப்பிரிக்காவிலிருந்து 400க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை ரஷ்யா இறக்கியுள்ளதாக அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உண்மையில், ஜனவரியில் 2,000 முதல் 4,000 கூலிப்படையினர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாகவும், அவர்களுக்கு பல்வேறு இலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் Donetsk மற்றும் Luhansk நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 400 பேர் மட்டும், உக்ரைன் ஜனாதிபதியான Volodymyr Zelensky பெலாரஸிலிருந்து Kyivக்கு திரும்பும் வழியில் அவரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த கூலிப்படை குறித்து அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த கூலிப்படையை நடத்துவதே ரஷ்ய அதிபருக்கு நெருக்கமானவரான Yevgeny Prigozhin என்பவராம். அவர் உக்ரைன் ஜனாதிபதியான Zelenskyயைக் கொல்பவர்களுக்கு பெருந்தொகை அளிப்பதாக வாக்களித்துள்ளாராம்.
நன்கு பயிற்சி பெற்ற அந்தக் கூலிப்படையினர், ரஷ்ய தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கிடைப்பதற்காக காத்திருக்கிறார்களாம். அவர்களது இலக்கு, உக்ரைன் ஜனாதிபதி, உக்ரைன் பிரதமர், மொத்த கேபினட் அமைச்சர்கள், Kyiv மேயர் Vitali Klitschko மற்றும் அவரது சகோதரரான Wladimir ஆகியோரைக் கொல்வதாம்!
ஆனால், அவர்களது திட்டத்தில் மண் விழுந்துள்ளது. காரணம், Kyiv 36 மணி நேர ஊரடங்கைப் பிறப்பித்துவிட்டது. இந்த கூலிப்படையினரை எதிர்கொள்வதற்கு வசதியாக, பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியே வந்தால் அவர்கள் ரஷ்ய கூலிப்படையினர் என தவறாகக் கருதப்பட்டு, கொல்லப்படலாம் என உக்ரைன் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புடின் Zelenskyயுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பதால், கொஞ்சம் பொறுத்திருக்குமாறு கூலிப்படையினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்களாம்.
தன்னைக் கொல்ல ரஷ்யா கொலையாளிகள் அனுப்பியிருப்பதாக வெளியான தகவல் ஒன்றும் உக்ரைன் ஜனாதிபதியான Zelenskyக்கு ஆச்சரியத்தை அளிக்கும் செய்தியாக தோன்றவில்லை. காரணம், அவர், தான் ரஷ்யப் படையினரால் வேட்டையாடப்படுவதாகவும், தான் அவர்களுடைய முதல் இலக்கு என்றும், தன் குடும்பத்தினர் இரண்டாவது இலக்கு என்றும் ஏற்கனவே கூறிவிட்டார்.