உக்ரைனின் Lviv விமான நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! வெளியான புகைப்படங்கள்
புடின் பொதுமக்களை குறிவைத்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் உக்ரைனின் மற்றோரு முக்கிய நகரமான Lviv-ல் விமான நிலையத்திற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிராக தனது தாக்குதலைத் தொடர்ந்துள்ளதாகவும், உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் விமான நிலையத்திற்கு அருகே இன்று அதிகாலை ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாகவும் லிவிவ் நகர மேயர் ஆண்ட்ரி சடோவி (Andriy Sadovy) கூறினார்.
இந்த தாக்குதலில், லிவிவ் நகரில் உள்ள ஒரு விமான பழுதுபார்க்கும் ஆலையை ரஷ்யப் படைகள் அழித்துவிட்டதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மேயர் கூறினார்.
ஆறு "குரூஸ் ஏவுகணைகள் (X-555) கருங்கடலில் இருந்து ஏவப்பட்டன" என்று உக்ரைனின் விமானப்படை கூறியது. அதில் இரண்டு ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PC: REUTERS/Roman Baluk
Lviv மேற்கு உக்ரைனில் உள்ள மிகப்பெரிய நகரம் மற்றும் அதன் அழகிய காட்சிகளுக்காக அறியப்பட்ட ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். கடந்த வார இறுதியில் ரஷ்ய கப்பல் ஏவுகணைகளால் லிவிவ் நகருக்கு மேற்கே உள்ள இராணுவ தளம் அழிக்கப்பட்டு 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
30 ஆண்டுகளுக்கு கழித்து ஆசிரியரை 101 முறை குத்தி கொலை செய்த நபர்- சொன்ன காரணம்!
0.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் போலந்தின் எல்லையில் இருந்து 70 கிலோமீட்டர்கள் (45 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம், பிப்ரவரி 24 அன்று ரஷ்யப் படைகள் படையெடுத்ததில் இருந்து பெருமளவில் காப்பாற்றப்பட்டது.
Photo: AP
Photo: REUTERS/Kai Pfaffenbach
உக்ரைனில் இருந்து தப்பி கப்பலில் பயணித்த இளம்பெண்ணுக்கு 2 ஆண்களால் நேர்ந்த கொடூரம்!
