தப்பிச் செல்லும் முன் ரஷ்ய படைகளின் இழிவான செயல்! ஜெலென்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு
கெர்சனின் முக்கிய உள்கட்டமைப்புகளை ரஷ்ய படைகள் தப்பிச் செல்லும் முன் அழித்துவிட்டதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்
கெர்சன் நகரில் பெரும்பாலான வீடுகளில் மின்சாரம், தண்ணீர் இல்லை என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கெர்சனில் இருந்து தப்பிச் செல்லும் முன் ரஷ்ய படைகள் முக்கிய உள்கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
கெர்சனில் இருந்து ரஷ்யா பின் வாங்கிய நிலையில், அங்கிருந்து வெளியேறியபோது நகரின் முக்கிய உள்கட்டமைப்பை அழித்ததாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், 'கெர்சனில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன், ரஷ்யப் படைகள் நகரின் தொடர்பு, நீர் வழங்கல், மின்சாரம், வெப்பம் என அனைத்து முக்கியமான உள்கட்டமைப்புகளையும் அழித்துவிட்டன' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் ரஷ்ய துருப்புகள் அனைத்து முக்கியமான உள்கட்டமைப்பு பொருட்களையும் வெட்டி எடுத்துள்ளனர் என கெர்சன் பிராந்திய ஆளுநர் Yaroslav Yanushevych குறிப்பிட்டுள்ளார்.
கெர்சனில் உள்ள பெரும்பாலான வீடுகளில் மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை மற்றும் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் உள்ளன என மற்றொரு பிராந்திய அதிகாரி Yuriy Sobolevskyy தெரிவித்துள்ளார்.
REUTERS/Valentyn Ogirenko
இதற்கிடையில் ரஷ்ய துருப்புகள் ரக்கூன் மற்றும் பிற விலங்குகளை திருடியதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கெர்சனில் முக்கிய உள்கட்டமைப்பை மீட்டெடுக்கும் பணியில் அந்நகர அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
(AP Photo/Leo Correa, File)