மாஸ்கோவை நெருங்கி வந்த ட்ரோன்களை சுட்டுவீழ்த்திய ரஷ்யா
மாஸ்கோவை நெருங்கி வந்த 3 ட்ரோன்களை தாக்கி அழித்ததாக, ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்தன.
ட்ரோன் தாக்குதல்கள்
2022ஆம் ஆண்டில் ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து, மாஸ்கோ மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அவ்வப்போது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களால் குறிவைக்கப்படுகின்றன. 
கடந்த நவம்பர் 24 மற்றும் நவம்பர் 28, டிசம்பர் 4ஆம் திகதிகளில் மாஸ்கோவை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடந்தன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மாஸ்கோவை நெருங்கி வந்த மூன்று ட்ரோன்களை, ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்ததாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.
சேதங்கள்
அவர் தனது அடுத்தடுத்த டெலிகிராம் பதிவுகளில் ட்ரோன்களை தாக்கி அழித்தது பற்றி தெரிவித்தார். ஆனால், தரையில் ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதா என்று அவர் கூறவில்லை.
அதேபோல் ட்ரோன்கள் எங்கு விழுந்தன என்பதையும் சோபியானின் குறிப்பிடவில்லை. ஆனால், அவசரகால குழுக்கள் இடிபாடுகளை கையாளும் இடத்தில் இருப்பதாக வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மாஸ்கோவிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ செயல்படும் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |