55 உக்ரைனிய டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா., எண்ணெய் கிடங்கில் தீவிபத்து
ரஷ்யாவை நோக்கி உக்ரைன் ஏவிய 55 டிரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது.
ரஷ்யா திங்கட்கிழமை ஒரே இரவில் 55 உக்ரைனிய டிரோன்களை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் வீழ்த்தியதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த டிரோன்களின் சிதறல் எரிபொருள் கிடங்கில் தீவிபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள் இரவு உக்ரைனிய டிரோன்கள் ரஷ்யாவின் 6 பிராந்தியங்களில் தாக்குதல் முயற்சி மேற்கொண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
மேற்குக் கரையின் வோரோனெஷ் பகுதியில் 6 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
அப்போது, அதன் சிதறல்கள் எண்ணெய் கிடங்கில் விழுந்து தீவிபத்தை ஏற்படுத்தியதாக வோரோனெஷ் மாநில ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் கூறியுள்ளார்.
இதே பகுதியில் 6 நாட்களுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
தீயணைப்பு நடவடிக்கைகள்
தீவிபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் தீயணைப்பு மற்றும் அவசர சேவைப்பணிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றன.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரஷ்யா-உக்ரைன் மோதல் மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில், இரு நாடுகளும் தாக்குதல்களை அதிகரித்துள்ளன.
இதனிடையே, டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக வந்தால், உக்ரைனுக்கு வழங்கப்படும் இராணுவ உதவியை நிறுத்தி போருக்கான உடன்பாட்டை விரைவாக மேற்கொள்வேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |