24 மணிநேரத்தில் 160 உக்ரேனிய ட்ரோன்களை வீழ்த்திய ரஷ்யா
கடந்த 24 மணிநேரத்தில் 160 உக்ரேனிய ட்ரோன்களை ரஷ்யா வீழ்த்தியுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 160 உக்ரேனிய ட்ரோன்கள் மற்றும் 4 குண்டுகள் (Guided Bombs) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இதில் ரஷ்யாவின் மேற்கு எல்லைப் பகுதிகளில் மட்டும் 33 ட்ரோன்கள் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் நேரப்படி, நேற்று காலை 9.30 முதல் மதியம் 12.00 வரை 13 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதன்பிறகு 2 மணிநேரத்தில் 20 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன.
இம்மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் புடின் இடையே அலாஸ்காவில் நடந்த சந்திப்பிற்கு முன்னதாக, உக்ரைன் தாக்குதல்களை அதிகரித்துள்ளதகா ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் உக்ரைன் ஷெல் மற்றும் ட்ரான் தாக்குதல்களால் 22 பேர் உயிரிழந்ததாகவும், 105 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தாக்கப்பட்ட பகுதிகளை குறிக்கும் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் தீவிரவாத நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்தின் துணை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia drone strike 2025, Ukraine drone attacks, 160 drones shot down Russia, Russia Ukraine war update, Russian air defense success, US Russia summit Alaska, Russia Foreign Ministry statement, Russia vs Ukraine drone war