உக்ரைனின் தலைநகரை குறிவைத்து ரஷ்யா ட்ரோன், ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களில் உக்ரைனில் 6 பேர் பலியாகினர்.
மீண்டும் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ட்ரோன், ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியதில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்தன.
அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் இதில் மூவர் உயிரிழந்தனர்.
அதேபோல் தெற்கு பகுதியில் ரஷ்யா நடத்திய இரண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகினர். இதனை உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஏவுகணைகளும் அழிக்கப்பட்டன
இந்த சம்பவம் குறித்து நகர இராணுவ நிர்வாகத் தலைவர் திமூர் தகாசென்கோ கூறும்போது, அதிகாலை வானத்தில் வெடிப்புகள் வெடித்தன. தாக்குதலுக்கு எதிராக வான் பாதுகாப்புகள் செயல்பட்டன. மேலும் ஒரு ஷாப்பிங் மால், வணிக மையம், மெட்ரோ நிலையம் மற்றும் தண்ணீர் குழாய் சேதமடைந்தன என்றார்.
அதேபோல் செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறுகையில், "கீவ்வை நோக்கி செலுத்தப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் அழிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் ஒன்று குறைந்த உயரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பெரும் சேதம் ஏற்பட்டது" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |