உக்ரைன் உயிரியல் பூங்கா மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 10 முயல்கள் உயிரிழப்பு
உக்ரைனில் அமைந்துள்ள வனவிலங்கு உயிரியல் பூங்கா மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உயிரியல் பூங்கா மீது தாக்குதல்
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி G7 நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
கார்கிவ் நகரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் பல விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன, மேலும் பல விலங்குகள் காயமடைந்துள்ளன.
அரசு வழக்கறிஞர் வெளியிட்ட தகவலின் படி, ரஷ்ய ட்ரோன் விழுந்து வெடித்ததில் முயல்கள், கினிப் பன்றிகள், எலிகள், என 100க்கும் மேற்பட்ட சிறிய விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
10 முயல்கள் கொல்லப்பட்டு இருப்பதுடன், யானை அடைப்பு பகுதிக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததால் அப்பகுதியில் இருந்த யானை மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக பெரிய விலங்குகள் எதற்கும் உடல் ரீதியான காயங்கள் ஏற்படவில்லை.

அதே நேரத்தில், ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் உயிரியல் பூங்காவில் இருந்த பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |