உக்ரைன் தலைநகரில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதல்
கீவ் மீது ரஷ்யா தாக்குதல்
2022 ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போரை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா பெரும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
3 பேர் உயிரிழப்பு
இந்த தாக்குதலில், ட்ரோன்கள் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளில் விழுந்து, அங்கு தீ விபத்து ஏற்பட்டது. ஹெலிகாப்டர்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் காயமடைந்த மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
இந்த தாக்குதலில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |