ரஷ்யாவின் மிகப்பெரிய கடற்படை தலைமையகம்... துவம்சம் செய்த உக்ரேனிய ட்ரோன் விமானம்
ரஷ்யாவின் கடற்படை தலைமையகம் குறித்த தாக்குதலில் சின்னாபின்னமானதாக தகவல்
மேற்கு கிரிமியாவில் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது - கிரிமியா நிர்வாகத் தலைவர்
கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் கடற்படை தலைமையகத்தை ட்ரோன் விமானத்தால் உக்ரேனிய இராணுவம் மொத்தமாக துவம்சம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரோன் விமானம் முன்னெடுத்த மின்னல் தாக்குதல் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் கரும்புகை எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் கடற்படை தலைமையகம் குறித்த தாக்குதலில் சின்னாபின்னமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற கிரிமியாவில் இருந்து தாக்குதல் அச்சம் காரணமாக ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே குறித்த தாக்குதல் சம்பவத்தை மாகாண ஆளுநரும் உறுதி செய்துள்ளதுடன், துரதிஷ்டவசமாக அந்த ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்த தவறியதாகவும், லேசான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
@east2west
மேலும், உக்ரேனிய மேற்கத்திய நாடுகளின் அடாவடி பாராட்டுக்குரியது என சீறியுள்ள அவர், முடிந்தால் அனைவரும் அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருக்க வேண்டும் எனவும் கர்ஜித்துள்ளார்.
இதனிடையே, Yevpatoriya பகுதியிலும் தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது ரஷ்யாவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மேற்கு கிரிமியாவில் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கிரிமியாவின் நிர்வாகத் தலைவர் Sergei Aksyonov தெரிவித்துள்ளார்.
கிரிமியா மீதான திடீர் தாக்குதல் நடவடிக்கையானது சுற்றுலாப் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.