ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவாகிய நிலநடுக்கம்: ரஷ்யா பாதிப்பின்றி தப்பியது எப்படி?
ஜப்பானை 2011ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 9.0ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. அதைத் தொடர்ந்து எழுந்த சுனாமியில் சிக்கி 18,000 பேர் உயிரிழந்தார்கள், ஏராளமானவர்கள் மாயமானார்கள்.
ஜூலை மாதம் 30ஆம் திகதி, காலை, ரஷ்யாவை ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. ஆனால், அந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
நிலநடுக்கத்தால் மக்கள் பாதிப்பின்றி தப்பியது எப்படி?
ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், தற்போது நிலநடுக்கம் தாக்கிய நிலப்பகுதி, ஒரு காலத்தில் ஜப்பான் ஆக இருந்தது.
இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில், கம்சத்காவுக்கும் ஜப்பானிய தீவான ஹொக்கைடோவுக்கும் இடையில் இருந்த Kurils என அழைக்கப்படும் நான்கு தீவுகளை ஜப்பானிடமிருந்து சோவியத் யூனியன் கைப்பற்றியது.
ஆக, முன்னர் ஜப்பான் நிலப்பரப்பாக இருந்த, தற்போதைய ரஷ்யாவின் நிலப்பரப்பில்தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆக, ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரை பலி வாங்கிய நிலையில், அதே பகுதியில், ஜப்பானுக்கு அருகில் அமைந்துள்ள கம்சத்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூறப்படுவது விந்தைதான்.
ஆக, இவ்வளவு பயங்கர நிலநடுக்கத்திலிருந்து ரஷ்யா எப்படி தப்பியது என்று கேட்டால், சரியான நேரத்தில் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதனால் உடனடியாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகவும், கட்டிடங்கள் நில அதிர்வைத் தாங்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்கள் கிரெம்ளின் அதிகாரிகள்!
அத்துடன், சில இடங்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்ததாலும் பாதிப்பைத் தவிர்க்க முடிந்தது என்றும் கூறியுள்ளது ரஷ்ய தரப்பு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |