உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல்
Russia Election Officer Killed in Ukraine Attack: உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி
கெர்சன் மாகாணத்தில் நடைபெற்ற ரஷ்ய தேர்தல் பணியின் போது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தேர்தல் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் எல்லா பாம்ஃபிலோவா உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், கெர்சன் பகுதியில் பொதுமக்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் Nizhneserogozsky மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையம் எண் 220 தேர்தல் ஆணைய உறுப்பினர் ஓல்கா பெட்ரோவ்னா டெம்யானென்கோ எனவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தேர்தல் செயல்முறைகளை சீர் குலைக்கும் விதமாக தொலைதூர கிழக்கு பகுதிகளில் உக்ரைன் நாச வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்றது.
மாஸ்கோவில் நடைபெற்ற வாக்குப்பதிவில் காலை 10 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 3.2 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.