ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா: ஆதாரமற்ற நடவடிக்கை என புகார்!
ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த 18 தூதரக உறுப்பினர்களை ரஷ்யா அங்கீகரிக்க முடியாத பிரதிநிதிகளாக அறிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா போர்த்தாக்குதலை மேற்கொண்டதை அடுத்து, அதனை கண்டிக்கும் விதமாக கடந்த மாதம் அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் செக் குடியரசு போன்ற ஐரோப்பிய யூனியன் நாடுகள் 43 ரஷ்ய தூதரக உறுப்பினர்களை உளவு பார்த்ததாக கூறி நாட்டை விட்டு வெளியேற்றியது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் இந்த நடவடிக்கைகளுக்கு ரஷ்யா கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.
இந்தநிலையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த 18 தூதரக உறுப்பினர்களை அங்கீகரிக்க முடியாத அரசு பிரதிநிதிகளாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அங்கீகரிக்க முடியாத அதிகாரிகளாக அறிவிக்கப்பட்ட தூதர்கள் விரைவில் ரஷ்யாவை விட்டு வெளியேறுவார்கள் என அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த திடீர் அறிவிப்பிற்கு, ஆதாரமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க அறிவிப்பு என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
மேலும் எந்தவொரு அடித்தளமும் இல்லதாக ரஷ்யாவின் இத்தகைய அறிவிப்பு ஐரோப்பிய யூனியனுக்கு பதிலடி தரும் நோக்கில் எடுக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.