பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தடை: ரஷ்யாவின் இந்த முடிவுக்கு என்ன காரணம்?
எரிபொருள் ஏற்றுமதி தடையை இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்து இருப்பதாக ரஷ்யா முடிவு செய்துள்ளது.
எரிபொருள் ஏற்றுமதிக்கான தடை
வெளிநாடுகளுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்த ஆண்டின் டிசம்பர் வரை நீட்டிக்க திட்டமிட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஜூலை மாத இறுதியுடன் முன்னர் அறிவிக்கப்பட்ட தடை முடிவடைய உள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நீட்டிக்கப்பட்ட தடை எரிபொருள் உற்பத்தி செய்வோர் மற்றும் எரிபொருள் உற்பத்தி செய்யாதோர் என இருவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிப்பொருள் தடை டிசம்பர் வரை நீடிப்பது தொடர்பான தகவலை ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு சந்தை நிலவரம் சீரடைந்த பிறகே எரிபொருள் ஏற்றுமதி மீதான தடை தளர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம் நாட்டில் எரிபொருள் சந்தை முழுமையான ஸ்திரத்தன்மை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தகவல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தை தடையற்றதாக மாற்ற கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யா பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |