உக்ரைன் உடனான போரில் பெரும் இழப்பை சந்தித்துள்ள ரஷ்யா! வெளியான முழு விவரம்
உக்ரைன் உடனான போரில் 3500 இராணுவ வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி Kyiv ஊடகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 3வது நாளாக தாக்குதல் நடத்திய வரும் ரஷ்யா, தற்போது தலைநகர் Kyiv-ல் நுழைந்த தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க இருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் உடனான போரில் ரஷ்யா பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
24ம் திகதி முதல் உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, விமானநிலையங்கள், ராணுவக் கிடங்குகள் மற்றும் பொதுமக்கள் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
26ம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 8 மணி நிலவரப்படி, ரஷ்யா சுமார் 3500 வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி Kyiv ஊடகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, 102 டாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கிகள், 14 போர் விமானங்கள், 8 ஹெலிகாப்டர் மற்றும் BUk-1 அமைப்பை ஒன்றையும் ரஷ்யா இழந்தள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.