மூன்று பிரதான சவால்களை எதிர்கொள்ளும் ரஷ்யா., குடிமக்கள் மீது இறங்கும் சுமை
உக்ரைன் மீது போரில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஷ்யா தற்காலிகமாக மூன்று பிரதான சவால்களை சந்திக்கிறது.
ரஷ்யா தற்போது கடுமையான பணவீக்கம், அதிக பாதுகாப்புச் செலவுகள் மற்றும் இறுக்கமான வரவு செலவுத் திட்டங்கள் (பட்ஜெட்) என மும்முனையிலும் போராடி வருகிறது.
இந்தாண்டில் பணவீக்கம் 9 சதவீதமாக உயர்ந்துள்ளது, மத்திய வங்கியின் வட்டி விகிதம் 21% ஆக உயர்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிக பாதுகாப்புச் செலவுகள்
2024-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவுகள் $125 பில்லியன் ஆகும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 6% ஆகும். இது மொத்த அரசு செலவினங்களின் 40% ஆகும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரஷ்யாவின் பாதுகாப்புச் செலவுகள் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.
தினசரி வாழ்க்கைச் சிரமங்கள்
மொஸ்கோ அருகே உள்ள சிறிய நகரமான டெடோவ்ஸ்கில் மக்கள் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வூதியம் வாங்கும் முதியவர் ஒருவர் மாதம் 16,000 ரூபிள் (ஏறக்குறைய $150) மட்டுமே பெறுகிறார். அதிக விலையால் மருந்துகள், மாட்டிறைச்சி, புதிய ஆடைகள் போன்றவற்றை வாங்க முடியவில்லை என அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், மற்றொரு குடியிருப்பாளர், அடிப்படை பொருட்களின் விலை தினசரி உயர்வை சுட்டிக்காட்டினார். ஆப்பிள் 150 ரூபிள், காபி 400 ரூபிள் என விலை ஏறியயுள்ளதால அவர் கூறியுள்ளார்.
போரின் தேவைகளை பூர்த்தி செய்ய பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கின்றன. ஆனால், இதன் விளைவுகளை சாதாரண மக்கள் அன்றாட வாழ்க்கையில் தாங்கி வருகின்றனர். பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு காரணமாக மக்கள் அடிப்படை தேவைகளுக்கே கட்டுப்படுகின்றனர். இந்த பொருளாதார நிலைமைகள், ரஷ்யாவின் பொதுமக்களுக்கு கடுமையான சவாலாக உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russian Federation, Russia Inflation