ரஷ்யா தோல்வி! உக்ரைன் வெற்றி பெற்றுள்ளது... அமெரிக்கா பரபரப்பு தகவல்
உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதன்படி ரஷ்யாவின் போர் நோக்கங்களைப் பொறுத்தவரை, அந்த நாடு ஏற்கனவே தோல்வியடைந்துள்ளது மற்றும் உக்ரைன் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கின் கூறியுள்ளார்.
ஆண்டனியும், பாதுகாப்புத்துறை செயலாளர் டாயர்ட் ஆஸ்டினும் உக்ரைனுக்கு சென்று ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்தனர்.
ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் நாடு! குழப்பத்தில் உலக நாடுகள்... இந்தியாவுக்கு சிக்கல்?
அந்த சமயத்தில் தான் இந்த கருத்துக்களை ஆண்டனி தெரிவித்தார்.
மேலும் உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவியை செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றும் கூறினார்.