ஐரோப்பிய ஒன்றியம் மிரளும் வேகத்தில் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி., ஜேர்மனி கவலை, எச்சரிக்கை
ரஷ்யாவின் ஆயுத உற்பத்தியின் அளவு மற்றும் வேகம் குறித்து ஜேர்மனி ஒரு அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒருவருடத்தில் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை, ரஷ்யா வெறும் மூன்று மாதங்களில் உருவாக்கி வருகிறது என்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
1000 நாட்களைக் கடந்து நடந்துவரும் உக்ரைன் போரின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக போர் பொருளாதாரமாக மாற்றி, ஆயுத உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும், இது உண்மையில் மேற்கு நாடுகளுக்குத் தீராத சவாலாக உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை
தற்போது, ஜேர்மனியின் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதாகவும், ரஷ்யாவின் பெருத்த ஆயுத உற்பத்தியை சமாளிக்க ஜேர்மனியின் போர் திறனையும் பாதுகாப்பு முதலீட்டையும் அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஜேர்மனி, இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய பாதுகாப்பு தொழில்துறை மூலோபாயத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இது, ஆயுத உற்பத்தியை மேம்படுத்த மற்றும் நடைமுறைகளை சுலபமாக்குவதற்கான பல முயற்சிகளை உள்ளடக்கும்.
ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி வேகமும், அதன் போர் பொருளாதார தகுதியும் மேற்கு நாடுகளுக்கு அதிர்வுகளை உருவாக்கி வருகின்றன.
ஜேர்மனியின் இந்த நடவடிக்கை, நவீன ஆயுத உற்பத்தியில் எதிர்மறை பாதிப்புகளை சமாளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany European Union Russia, Russia Weapon Production, EU Russia War, Germany Russia War, European Union Russia War