ஊடகவியலாளரை மிரட்டிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்: வைரல் வீடியோ
இந்திய தலைநகர் புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர், ஊடகவியலாளர் ஒருவரை மிரட்டும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
ஊடகவியலாளரை மிரட்டிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்
BRICS உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கே லாவ்ரோ, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, ஊடகவியலாளர் ஒருவர் மொபைலில் பேசிக்கொண்டே இருக்க, தயவு செய்து இங்கிருந்து வெளியே செல்கிறீர்களா என அவரிடம் கூறினார் லாவ்ரோ.
Sir, if you don't surrender your phone, they will take out a gun."
— MOSCOW NEWS 🇷🇺 (@MOSCOW_EN) May 15, 2026
At Lavrov's press conference, the journalist interrupted him twice by talking on the phone.
The Russian FM gave him a lesson in etiquette. pic.twitter.com/6hWkbgBf47
ஆனால், அந்த ஊடகவியலாளரோ தொடர்ந்து தன் மொபைலில் பேசிக்கொண்டிருக்க, பொறுமையிழந்த லாவ்ரோ, நீங்கள் உங்கள் மொபைலை ஒப்படைக்கவில்லை என்றால் துப்பாக்கியை எடுக்கவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
அந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |