எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளான ரஷ்யா: காரணம் என்ன?
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
எண்ணெய் உற்பத்தித் தரவு
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யா, 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பிறகு, தனது எண்ணெய் உற்பத்தித் தரவுகளை வகைப்படுத்தியது.

ஆனால், ரஷ்யாவின் அரசு வருவாயில் ஏறக்குறைய கால் பங்கைக் கொண்டுள்ள எரிசக்தி மற்றும் ஏற்றுமதி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தனது தாக்குதல் நடவடிக்கைகளை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், ரஷ்யா ஏப்ரல் மாதத்தில் தனது எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
400,000 பீப்பாய்கள் வரை
துறைமுகங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்ததால் ரஷ்யா இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறியுள்ளது.

இந்தக் குறைப்பானது ஒரு நாளைக்கு 300,000 முதல் 400,000 பீப்பாய்கள் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்துறை வட்டாரங்கள் மற்றும் ராய்ட்டர்ஸின் கணக்கீடுகளின்படி, 2025ஆம் ஆண்டின் பிற்பகுதி அளவுகளுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாத சரிவானது ஒரு நாளைக்கு 600,000 பீப்பாய்கள் வரையிலான மொத்த சரிவைக் குறிக்கிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |