அமெரிக்க கைதியை விடுவித்த ரஷ்யா! போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அறிகுறி - ட்ரம்ப் கருத்து
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாக உறுப்பினர் ஒருவர், ரஷ்யாவிற்கு சென்றதைத் தொடர்ந்து அமெரிக்க கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
14 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் போகல் என்பவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 2021ஆம் ஆண்டு ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஃபோகல் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ஆனால், டிசம்பர் மாதம் ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில், ட்ரம்பின் அமைச்சரவையில் உள்ள அதிகாரியான கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு ஃபோகல் குறித்த அறிவிப்பு வெளிவந்தது.
அதாவது அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனை வெள்ளை மாளிகை ஒரு ஒப்பந்தத்தில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு நேர்மையான அறிகுறி என கூறியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்காவுக்கு திரும்பிய ஃபோகலை ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வரவேற்றார்.
போரை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய தொடக்கம்
பின்னர் பேசிய டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ரஷ்யா தங்களை நன்றாக நடத்தியதாகவும், உண்மையில் அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரு உறவின் தொடக்கமாக இது இருக்கும் என்று நம்புவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அத்துடன் இரண்டாவது கைதி புதன்கிழமை கூடுதல் விவரங்களை வழங்காமல் விடுவிக்கப்படுவார் எனவும் கூறினார்.
இதற்கு ரஷ்யாவிடம் இருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை. எனினும் அரசின் செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகை அறிவிப்பை மேற்கோள் காட்டின.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |