அணு ஆயுத ரகசியங்களை பகிர்ந்த ரஷ்யா... பதிலுக்கு ஈரான் எடுத்த முடிவு: அச்சத்தில் மேற்கத்திய நாடுகள்
ஈரானுக்கு முக்கியமான அணு ஆயுத ரகசியங்களை பகிர்ந்த ரஷ்யா, பதிலுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர் கெய்ர் ஸ்டார்மர் அவசர சந்திப்பு
இன்னும் சில வாரங்களில், உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்குதல் முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் அவசர சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளார். கடந்த வாரம் ஈரான் அனுப்பிய Fath-360 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் உறுதி செய்துள்ளது.
லண்டனில் விஜயம் செய்திருந்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கையில், ஈரான் இதுவரை காத்திருந்த அணு ஆயுத ரகசியங்களை ரஷ்யா பகிர்ந்து கொண்டுள்ளதாகவும், அதில் விண்வெளி தொடர்பான ரகசியங்களும் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது பிரித்தானிய வான்வெளியை பயன்படுத்தவோ அல்லது பிரித்தானியாவில் தரை இறங்கவோ ஈரான் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏவுகணைகளை ஈரானுக்கு கொண்டுசென்ற ரஷ்ய கப்பல் நிறுவனம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தும் அனுமதி உக்ரைனுக்கு அளிப்பது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ நாடுகளுடன்
ஈரான் எடுத்துள்ள முடிவால் தற்போது உக்ரைன் - ரஷ்ய போர் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாம்மி குற்றம் சாட்டினார். ஆனால் இதில் தங்களுக்கு பங்கில்லை என்றே ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது தொடர்பில் விவாதிக்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இத்தாலி பயணப்பட உள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தில் ஆதரவளிக்க ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளையும் பிரித்தானியா நாட உள்ளது.
ஆனால் இந்த ஏவுகணை விவகாரம் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்ற அச்சத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
Storm Shadow ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும் என்றால் நேட்டோ நாடுகளுடன் ரஷ்யா போரில் ஈடுபடும் நிலை உருவாகும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |