உக்ரைனில் சாதிக்கிறோம்... அறிக்கை அளித்த மூத்த தளபதியை அதிரடியாக நீக்கிய புடின்
உக்ரைனில் ரஷ்ய இராணுவம் சாத்தித்து வருவதாக பொய்யான தகவல்களை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தெரிவித்த தளபதி ஒருவர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
போதுமான பயிற்சியற்ற
கிழக்கு உக்ரைனில் போரிட்டுவரும் ரஷ்ய இராணுவத்தின் தெற்கு குழுவுக்கு தளபதியாக செயல்பட்டவர் ஜெனடி அனாஷ்கின். இவரையே தற்போது விளாடிமிர் புடின் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார்.
உக்ரைனில் தமது படைகள் சாதித்து வருவதாக தளபதி ஜெனடி அனாஷ்கின் அறிக்கை அனுப்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், போதுமான பயிற்சியற்ற, போருக்கான ஆயுதங்கள் இல்லாமல் நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்களை முன் வரிசையில் அனுப்பி, அவர்களின் மரணத்திற்கும் ஜெனடி அனாஷ்கின் காரணமாகியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்ய இராணுவம் அல்லது ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்த விவகாரம் தொடர்பில் தகவலேதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து தகவல் வெளியானதாகவும், இது வெறும் சுழற்சி முறையான மாற்றம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய உயர்மட்ட தளபதி
மே மாதத்தில் தான் ரஷ்ய இராணுவத்தின் தெற்கு குழுவின் தளபதியாக அனாஷ்கின் நியமிக்கப்பட்டார். 2008ல் ஜார்ஜியாவுடனான ரஷ்யாவின் போரின் போது, அவர் ரஷ்யாவின் ஹீரோவாக அறிவிக்கப்பட்டார். ரஷ்யா நாட்டின் மிக உயர்ந்த கௌரவப் பட்டம் அது.
நவம்பர் 20ம் திகதி பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளால் ரஷ்ய உயர்மட்ட தளபதி கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்தே அனாஷ்கின் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் முன்னெடுத்த குறித்த தாக்குதலில் 500 வடகொரிய வீரர்களுடன் ரஷ்யாவின் வலேரி சோலோட்சுக் என்ற மூத்த தளபதியும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |