போரை நிறுத்த ட்ரம்ப் அவசரம் காட்டுவதால் பேரம் பேசும் ரஷ்யா? வெளியான தகவல்
உக்ரைனில் அவசரமாக அமைதி ஒப்பந்தத்தை நோக்கி ட்ரம்ப் செல்வதால், ரஷ்யா பெரும் பேரம் பேசுகிறது.
அதிகபட்ச நன்மைகளைப் பெற
சவுதி அரேபியாவில் ரஷ்ய மற்றும் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புடினுக்கு இடையே சாத்தியமான சந்திப்பு மற்றும் மாஸ்கோ ஆராய விரும்பும் இருதரப்பு உறவுகளில் சாத்தியமான முன்னேற்றங்கள் குறித்து பிரதிநிதிகள் விவாதித்தனர்.
இந்த நிலையில், ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்காக, அமெரிக்க சகாக்களிடம் "மிகவும் இணக்கமான மற்றும் சில அம்சங்களில் பாராட்டுக்குரிய அணுகுமுறையை வெளிப்படுத்த" புடின் தனது தூதர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்று ரஷ்ய தூதரக வட்டாரம் ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.
அணுகுமுறையில் நெகிழ்வுத்தன்மை
ட்ரம்ப் உக்ரைனில் அவசரமாக அமைதி ஒப்பந்தத்தை நோக்கி செல்வதால், ரஷ்யா பெரும் பேரம் பேசுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரஷ்யா தூதர் ஒருவர் கூறுகையில், "எங்கள் தூதுக்குழு பேச்சுவார்த்தை நடத்தும் பணியை மேற்கொண்டது; ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வாதிடுவதற்கு அல்ல" என்றார்.
அதேபோல் மற்றொரு தூதர், "பேச்சுவார்த்தைகளுக்கான எங்கள் அணுகுமுறையில் நெகிழ்வுத்தன்மை மற்றும் கடினத்தன்மையை இணைப்பதே அறிவுறுத்தல்கள்" என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |