இறங்கி வந்துள்ள ரஷ்யா... முக்கிய நிபந்தனைகளை விலக்கிக் கொள்ளப் போவதாக தகவல்
இன்று உக்ரைனும் ரஷ்யாவும் துருக்கியில் நேருக்கு நேராக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போகும் நிலையில், சில நல்ல தகவல்கள் வந்துள்ளன.
அதாவது, போரின் துவக்கத்தில் ரஷ்யா உக்ரைனுக்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தது. தற்போது அந்த நிபந்தனைகளில் மூன்று முக்கிய நிபந்தனைகளை ரஷ்யா விலக்கிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உக்ரைன் அதிபர் தொடர்ந்து பதவியில் நீடிக்க அனுமதிப்பது, உக்ரைனை இராணுவ மயமாக்கக்ககூடாது என்னும் நிபந்தனை மற்றும் ரஷ்ய மொழிக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்னும் நிபந்தனை, ஆகிய நிபந்தனைகளை விலக்கிக்கொள்ள ரஷ்யா தயாராகி வருவதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக Financial Times பத்திரிகை தெரிவித்துள்ளது.
அத்துடன், நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தைக் கைவிடும் நிலையில், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கும் ரஷ்யா அனுமதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அமைதியை உருவாக்குவதற்காக தான் ரஷ்யாவுடன் சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ஆனால், தன் நாட்டை துண்டாக்க தான் அனுமதிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.