உக்ரைன் போரில் ஏராளம் போர் வாகனங்களை இழந்ததால் வேறு வழியில்லாமல் ரஷ்யா மேற்கொண்டு வரும் செயல்...
உக்ரைன் போரில் ஏராளமான போர் வாகனங்களை இழந்ததால், பழங்கால போர் வாகனங்களை எல்லாம் களமிறக்கி வருகிறது ரஷ்யா.
ரஷ்யப்படைகள் உக்ரைனின் கிழக்குப்பகுதி மீது கவனம் செலுத்தி வரும் நிலையில், 60 ஆண்டுகள் பழமையான போர் வாகனங்களை அப்பகுதிக்கு அனுப்பி வருகிறது ரஷ்ய இராணுவம்.
1961ஆம் ஆண்டு வாக்கில் தயாரிக்கப்பட்ட T-62 tankகள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தற்போது ரஷ்ய இராணுவத்தில் T-90, T-80 மற்றும் T-72 ரக நவீன போர் வாகனங்கள் 2,900ம், வேறு பல ரக போர் வாகனங்கள் 10,000 வரையும் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பிப்ரவரி 24ஆ திகதி உக்ரைன் ஊடுருவல் துவங்கிய பின் சுமார் 1,300 ரஷ்யப் போர் வாகனங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் படைகள் கணக்கிட்டுள்ளன.
மேலும், 10,000 போர் வாகனங்கள் ரஷ்யாவிடம் கையிருப்பில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவை ரஷ்யாவின் அதீத தட்பவெப்பம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால் அவற்றில் பல பயன்படுத்த இயலாத நிலைக்காளாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், அதை நிரூபிப்பதுபோலவே, ரஷ்யா கிழக்கு உக்ரைன் பகுதிக்கு 60 ஆண்டுகள் பழமையான போர் வாகனங்களை அனுப்பி வருகிறது.