ராணுவ தளவாடங்களுடன் வந்த உக்ரைனிய சரக்கு கப்பல்: ஒடெசா அருகே ரஷ்யா நடத்திய தாக்குதல்
Russia hits Cargo Vessel near Odessa: ஒடெசா அருகே உக்ரைனிய சரக்கு கப்பல் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறிவைக்கப்பட்ட உக்ரைனிய சரக்கு கப்பல்
ரோஸ்டோவ் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து ஒடெசா துறைமுகத்திற்கு அருகில் செயல்பட்டு வந்த உக்ரைனிய சரக்கு கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்ய ராணுவம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், ராணுவ தளவாடங்களை ஏற்றிக் கொண்டு கருங்கடல் துறைமுக நகரான ஒடெசாவிற்கு உக்ரைனிய சரக்கு கப்பல் சென்றதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு முன்னதாக சனிக்கிழமை காலை ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் உக்ரைனிய ட்ரோன்களின் சிதறல்கள் விழுந்ததில் அப்பகுதியில் இருந்த விடுதிக்கு சேதம் ஏற்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே இந்த கடல்வழித் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த புதன்கிழமை பின்லாந்து வளைகுடாவில் Kalibr, Oniks ஆகிய ஏவுகணைகளை ஏவக்கூடிய Naro-Fominsk என்ற ரஷ்யாவின் சிறிய ரக போர்க்கப்பலை குறிவைத்து தாக்கி நடத்தி இருப்பதாக உக்ரைனிய பாதுகாப்பு சேவைகள் தகவல் வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.