மயிரிழையில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலிருந்து தப்பிய கார்கிவ் அரசாங்க தலைமையகம்! சிசிடிவி பதிவான பரபரப்பு காட்சி
உக்ரைனில் அரசாங்க தலைமையக கட்டிடத்தை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 24ம் திகதி முதல் தொடர்ந்து 6வது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, நேற்று முதல் கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் குடியிருப்பு பகுதிகளில் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 8.00 மணியளவில் கார்கவ் நகர மத்தயில் உள்ள அரசாங்க தலைமையக கட்டிடத்தை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
எனினும், கட்டிடத்திற்கு மிக அருகே உள்ள சாலையில் ஏவுகணை தாக்கி பயங்கரமாக வெடித்து சிதறிய காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
தலைமையக கட்டிடத்திற்கு வெளியே கார்கள் நின்றுக்கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு ஏவுகணை தாக்கி பயங்கரமாக வெடித்து சிதறுகிறது.
BREAKING: Russian airstrike hits Kharkiv government headquarters in eastern Ukraine pic.twitter.com/cB8aKvkGL9
— BNO News (@BNONews) March 1, 2022
இந்த தாக்குதலில் தலைமையகம் கட்டிடம் உட்பட அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. இதில், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
WATCH: Significant damage after Kharkiv government headquarters in eastern Ukraine is hit by missile pic.twitter.com/BtswdekJmL
— BNO News (@BNONews) March 1, 2022