கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 235 தனித்தனி நேரடி மோதல்கள்: தாக்குதலில் தீவிரம் காட்டும் ரஷ்யா
ரஷ்யாவுடன் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான நேரடி மோதல்கள் ஏற்பட்டு இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் மோதல்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்ய படைகளுடன் கிட்டத்தட்ட 235 தனித்தனி நேரடி மோதல்களை உக்ரைனிய வீரர்கள் எதிர்கொண்டு இருப்பதாக திங்கட்கிழமை உக்ரைனிய ஆயுதப் படை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தி உக்ரைனின் தற்காப்பு அரண்களை உடைக்க ரஷ்யா தீவிரமாக முயன்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 79 வான்வழித் தாக்குதல்கள், 224 வான்வழி வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இதுவரை இல்லாத வகையில் உக்ரைனின் பல்வேறு இலக்குகளை குறிவைத்து கிட்டத்தட்ட 4,757 காமிகேஸ் ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.
பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குறிவைக்கப்பட்டு கிட்டத்தட்ட 3,387 நேரடி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் போர் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கான்ஸ்டான்டினோவ்கா பகுதி தற்போது போரின் மையப்பகுதியாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |