சுட்டு வீழ்த்தப்பட்ட 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: இரவோடு இரவாக நடந்த உக்ரைன்-ரஷ்யா மோதல்
இரவோடு இரவாக கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்
வெள்ளிக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், நேற்று இரவு மட்டும் உக்ரைனுடைய 553 ட்ரோன்களை ரஷ்ய படைகள் வெற்றிகரமாக சுட்டி வீழ்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைனிய ட்ரோன்களின் பாகங்கள் நாட்டின் பல்வேறு நீர்நிலைகளிலும் பிராந்திய பகுதிகளிலும் விழுந்து இருப்பதாக அமைச்சகத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகள்
அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, நவ்கோரோத், குர்ஸ்க், பிரியான்ஸ்க், பெல்கோரோத், காளுகா, ஸ்மோலென்ஸ்க், ரோஸ்தோவ், லெனின்கிராட் மற்றும் மாஸ்கோ ஆகிய மாகாணங்கள் மற்றும் வட்டார பகுதிகளின் மேல் தடுப்பு நடவடிக்கையானது நடைபெற்றுள்ளது.
தெற்கு பிராந்தியங்களான கிராஸ்னோதார், ஸ்டாவ்ரோபோல், மற்றும் கிரிமியா ஆகிய பகுதிகளின் மேலும் உக்ரைனிய ட்ரோன் தடுப்பு நடவடிக்கையானது நடந்துள்ளது.
இதைப்போல் கருங்கடல் மற்றும் அசோவ் கடல் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட வான்பரப்பிலும் இந்த தடுப்பு நடவடிக்கையை ரஷ்ய படைகள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைனிய ட்ரோன்களின் பாகங்களினால் பொதுமக்கள் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்தவொரு தகவலும் தெரியவரவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |