ரஷ்யா படையெடுப்பு: உக்ரைனில் இருந்து 1.5 மில்லியன் மக்கள் வெளியேற்றம்
ரஷ்ய படையெடுப்பு காரணமான உக்ரைனில் இருந்து கடந்த 10 நாட்களில் 1,500,000 பேர் வெளியேறியுள்ளனர்.
ரஷ்யாவின் விளாடிமிர் புடின் படை பிப்ரவரி 24-ஆம் திகதி உக்ரைன் மீது படையெடுத்தது. அதிலிருந்து இன்று வரை 11 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. போர் காரணமாக கடத்த 10 நாட்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் அகதிகள் நெருக்கடி இது என்று ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி (Filippo Grandi) தெரிவித்தார்.
ரஷ்ய குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளில் இருந்து தங்கள் குடும்பங்களை பாதுகாப்பாக வைத்திருக்க நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எல்லைகளை கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று ஐ.நா மதிப்பிடுகிறது.
More than 1.5 million refugees from Ukraine have crossed into neighbouring countries in 10 days — the fastest growing refugee crisis in Europe since World War II.
— Filippo Grandi (@FilippoGrandi) March 6, 2022
படையெடுப்பிலிருந்து வெளியேறும் மக்கள் பல்வேறு நாடுகளுக்குள் நுழைந்துள்ளனர், பெரும்பான்மையானவர்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்திற்குள் நுழைகின்றனர். போர் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 800,000 பேர் வந்துள்ளதாக வார்சா கூறுகிறது.
உக்ரைனுடன் ஒரு பெரிய எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மால்டோவாவில் (ஆனால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக இல்லை) 30,000 குழந்தைகள் உட்பட 250,000 பேர் நுழைந்துள்ளனர்.
உக்ரைனில் இருந்து சுமார் 3,700 பேர் நாட்டிற்கு வந்துள்ளதாக கிரீஸ் இன்று கூறியுள்ளது.
We have almost 30.000 Ukrainian children in #Moldova. We are their family until this madness ends. Praying for peace in #Ukraine. pic.twitter.com/sghrr3OS0o
— Maia Sandu (@sandumaiamd) March 5, 2022
உக்ரைனில் சுமார் 100,000 கிரேக்க இன மக்கள் வாழ்கின்றனர், அவர்களை வெளியேற்ற ஏதென்ஸ் கூடுதல் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு பல உக்ரேனியர்களும் கிரேக்கத்திற்குச் சென்றனர்.